இடி + மின்னல்.. சென்னை உள்பட 27 மாவட்டங்களுக்கு வந்த அலர்ட்.. இன்று இரவு 10 மணி வரை கொட்டும் மழை!
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை 3 மணிநேரத்தில் 27 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் நடந்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் தான் இன்று இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்.
இந்த இடங்களில் மிதமான மழையுடன் இடி, மின்னலுடன் இருக்க வாய்ப்புள்ளது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மழைநீர் தேங்கலாம். அதேபோல் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதவிர தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications