Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆரஞ்சு அலர்ட்.." நைட் வரை மழை விடவே விடாது.. சென்னை உட்பட 26 மாவட்டங்களுக்கு வந்த கனமழை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருவதால் வரும் நாட்களில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனச் சொல்லியுள்ள வானிலை மையம் இதற்காக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழகத்திலும் 26 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது வடகிழக்கு பருவமழை இருக்கும் நிலையில், பரவலாகவே மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை உட்பட மாநிலத்தில் பரவலாகவே மழை கொட்டி வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான ஒரு வானிலையே நிலவுகிறது.

rain Chennai rains

வானிலை

ஏற்கனவே, வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வரும் நாட்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆரஞ்சு அலர்டும் கூட விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு முழுக்க 26 மாவட்டங்களில் மழை கொட்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

26 மாவட்டங்களில் மழை கொட்டும்

அரியலூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி நேரம் வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகச் சாலையில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பு ஏற்படும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதேபோல கோவை, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இது தவிரக் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மழை கொட்டும்

முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்றைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் நாட்களில் கிளைமேட்

நாளைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரைக் காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை பொறுத்தவரை இன்று (23-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+