இரவில் வெளுக்கப்போகும் மழை.. நெல்லை - குமரி உள்பட 4 மாவட்டங்களுக்கு வந்த எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் நள்ளிரவு 1 மணி வரை தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.

இதற்கிடையே தான் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு 3 மணிநேரத்துக்கு ஒருமுறை மழை தொடர்பான எச்சரிக்கையை வழங்கி வருகிறது. அந்த வகையில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலான 3 மணிநேரத்துக்கான அலர்ட்டை வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛இன்று இரவு 1 மணி வரை 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் இடி, மின்னலுடனும் மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இனி வீட்டை விட்டு வெளியே எங்காவது சென்றால் ரெயின் கோட் அல்லது குடை எடுத்து செல்வது நல்லது. மேலும் வரும் நாட்களின் மழை இன்னும் தீவிரமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது தென் மேற்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் மழை தீவிரமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications