அடுத்த 6 நாட்கள்.. தமிழ்நாட்டிற்கு வரப்போகும் "கெட்ட செய்தி".. வானிலை வல்லுனர்கள் முக்கிய வார்னிங்
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு அப்டேட் வெளியிட்டு உள்ளது.
சென்னை ரெயின்ஸ் சார்பாக வெளியிடப்பட்டு உள்ள வானிலை அறிவிப்பில், மழைக்காலம் தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக மழை காலம் தீவிரம் அடைந்து வருகிறது. அடுத்த வாரமும் ஆக்டிவ் மழை இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அதன்பின் மழை குறைந்து மழை காலத்தில் சின்ன பிரேக் ஏற்படும்.
இந்த பிரேக் நமக்கு நல்ல செய்தி கிடையாது. ஏனென்றால் காவிரியில் நீர் வரத்து குறையும். காவிரியில் ஜூலை மாதம் 60 டிஎம்சி நீர் மட்டுமே வந்துள்ளது. சென்னைக்கு இந்த மழை காரணமாகவும், பிரேக் காரணமாகவும் நல்லது ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்., என்று குறிப்பிட்டு உள்ளனர்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அவர்கள் செய்துள்ள போஸ்டில், 28.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.07.2023 முதல் 02.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்); க்ளென்மார்கன் (நீலகிரி மாவட்டம்) 7, சின்னகல்லாறு (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி) தலா 5, அவலாஞ்சி (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 4, மேல் பவானி (நீலகிரி), ஆயின்குடி (புதுக்கோட்டை) தலா 3, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்).

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), நடிை (புதுக்கோட்டை], சின்கோனா (கோயம்புத்தூர்), அரிமளம் (புதுக்கோட்டை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), நிற்பரப்பு (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), வொர்த் எஸ்டேட் (நீலகிரி), ஹரிசன் மலையான லிமிடெட் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மேல் கூடலூர் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), PWD மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) தலா 2, பெரியார் (தேனி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), திருமயம் (புதுக்கோட்டை).
பேராவூரணி (தஞ்சாவூர்), ஆழியாறு (கோயம்புத்தூர்). கிளானிலை (புதுக்கோட்டை),தேக்கடி (தேனி), உதகமண்டலம் (நீலகிரி). சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
28.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மைரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பதிகள், மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
30.07.2023 மற்றும் 31.07.2023- தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: 28.07.2023 இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29.07.2023 மற்றும் 30.07.2023: கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications