இந்த வாட்டி புயல் வந்துரும் போலயே.. வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. செம மழை
சென்னை: காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் அறிவித்திருக்கிறது.
கடந்த சில தினங்களாகவே, டெல்லி, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில், பேய் மழை மிரட்டியெடுத்து விட்டது.. இதையடுத்து, தென்மேற்கு பருவமழையும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், "மத்திய மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதேபோல, மியான்மர் கரைக்கு அப்பால், வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த இரு சுழற்சிகளின் தாக்கத்தால், மத்திய மற்றும் மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம்.
வடமாவட்டங்கள்: தமிழகத்தின் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.. இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலைமை, வரும் 28 வரை தொடரவும் வாய்ப்புள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 25ம் தேதி வரை மணிக்கு அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்
வெப்பநிலை: தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, தூத்துக்குடியில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38.7 டிகிரி செல்ஷியசுக்கு மேலாக வெயில் பதிவானது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை ஆகிய இடங்களிலும் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications