மதுரை, விருதுநகருக்கு இன்று நல்ல மழை இருக்கு.. சென்னைக்கும் நல்ல வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தென் மாவட்டங்கள் (மதுரை, விருதுநகர் சுற்றியுள்ள பகுதிகள்) மற்றும் உள் தமிழகத்திற்கு இன்று நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கும் மாலை/இரவு நேரத்தில் ஆங்காங்கே மழை வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் "இன்று தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஒரு சிறந்த மழை நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல இடங்களில் பரவலான இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை - விருதுநகர் - சிவகங்கை - புதுக்கோட்டை பகுதிகள் முதன்மையான மையப் பகுதியாக (Hotspot) இருக்கும்; பரவலான இடிமின்னல் மற்றும் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்தப் பகுதியை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

A very good day is expected for Tamil Nadu once again Tamil Nadu Weatherman Pradeep John

சேலம், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட டெல்டா மற்றும் உள் தமிழ்நாட்டுப் பகுதிகளில், மதியம்/மாலை வேளையில் குறுகிய நேரத்திற்கு நல்ல இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கேடிசி (சென்னை மண்டலம்): மழைப்பொழிவு வரைபடங்கள் மழையை பெரிய அளவில் காட்டாவிட்டாலும், சென்னை புறநகர்பகுதியின் சில இடங்களில் இடிமேகங்கள் உருவாவதற்கு இன்னமும் நல்ல வாய்ப்பு உள்ளது. வழக்கம் போல வீசும் கடல்காற்றின் தூண்டுதல் மழையைத் தரக்கூடும், எனவே சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது" இவ்வாறு கூறியுள்ளார்.

இதனிடையே தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், " தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட்15) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர இடங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 16-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஆகஸ்ட் 18 முதல் முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (சுதந்திர தினம்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைப்பொழிவை பொறுத்தவரை தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 12 செ.மீ, அரியலூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தலா 7 செ.மீ, கோவை மாவட்டம் சோலையார், சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சேலம் மாவட்டம் எடப்பாடி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+