அசாமை நிலைகுலைய வைத்த கனமழை.. வெள்ளத்தால் 6 லட்சம் மக்கள் பாதிப்பு! 45 பேர் பலி
திஸ்பூர்: அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையால் சுமார் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 30ம் தேதிதான் தொடங்கும். ஆனால் இந்த முறை மே மாதம் 30ம் தேதியே மழை தொடங்கிவிட்டது. கேரளம் தொடங்கி மத்திய இந்தியா வரை ஒரு கிளையாகும், மேற்கு வங்கம் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை இரண்டாவது கிளையாகவும் பருவமழை மழையை கொடுக்கிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

கனமழை காரணமாக அசாமில் 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்திருக்கிறது. மொத்தமாக 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது வரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள நெமதிகாட்டில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதுபோல 8 ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர், கரீம்கஞ்ச், கச்சார், தேமாஜி, மோரிகான், உடல்குரி, திப்ருகார், டின்சுகியா, நாகோன், சிவசாகர், தர்ராங், நல்பாரி, சோனித்பூர், தவாம்பூர், கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 6,44,128 பேர் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். 45 பேரை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காரசிங்கா தேசிய பூங்காவில் வெள்ளம் புகுந்தால் பல விலங்குகள் மலைகளில் தஞ்சம் புகுந்துள்ளன. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருப்பதால் நிலைமை மோசமடையாமல் பாதுகாக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறியுள்ளது.
மீட்பு பணிகள் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவுடன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடி கூறியுள்ளதாக பிஸ்வா தெரிவித்திருக்கிறார்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications