Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீட்கப்பட்டார் நடிகர் விஷ்ணு விஷால்.. தமிழக அரசுக்கு ஆஹா ஓஹோவென பாராட்டு! நடிகர் விஷாலின் நண்பராச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது வீட்டுக்கு உள்ளேயும் மழை வெள்ளம் புகுந்துவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக வெள்ளம் பல இடங்களில் சூழந்து மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வீடுகள், கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து போலீசார் மற்றும் மீட்புக் படையினர் க்களுக்கு தேவையான உதவிகள் பணிகளை செய்து வருகின்றனர்.

 Actor Vishnu Vishal has published photos that the rain has flooded inside his house

மாநில பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு படையினர் துரிதமாக மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். பலத்த காற்று வீசியதன் காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற அளவுக்கு மழை பாதிப்பு பல இடங்களில் கடுமையாக இருக்கிறது.

பெரு மழையின் தாக்கம் காரணமாக நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் சார்ஜ் இல்லாமல் அவசர உதவி கூட கேட்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கடைகள், உணவகங்கள் மூடப்பட்டு இருப்பதால் விடுதிகளில் தங்கி உள்ளவர்கள், உணவின்றி தவித்து வருகின்றனர். வீடுகளின் தரைத் தளங்களில் தண்ணீர் புகுந்த காரணத்தால் படகுகள், பரிசல்கள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். புயல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் படும் துயர வீடியோக்கள் வெளியாகி வருகின்றனர்.

ஒரு பக்கம் அரசு முழு வீச்சில் மீட்புப் பணிகளையும் உதவிகளையும் செய்து வருகிறது. அதேபோன்று தன்னார்வலர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறார்கள். தொடர் மீட்பு பணியின் காரணமாக சென்னையின் பல இடங்களில் தேங்கிய வெள்ளம் வடிந்து இருக்கிறது. ஆனால், புறநகர் பகுதிகளில் நிலைமை இன்னும் சீராகவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நடிகர் விஷ்ணு விஷால் தனது வீட்டில் மழை நீர் புகுந்துவிட்டதாக புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காரப்பாக்கத்தில் தண்ணீர் மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவிக்கு அழைத்து உள்ளேன். மின்சாரம் இல்லை. வைஃபை இல்லை. செல்போன் சிக்னல் இல்லை. எதுவுமே இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்கு இருக்கும் பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை முழுவதும் வாழும் மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது." என்றார்.

அவரின் இந்த பதிவு அதிகளவில் பகிரப்பட்டது. ஊடகங்களிலும் செய்தியாக வந்தது. இதனை அடுத்து மீட்புப் படையினர் அவரது வீட்டுக்கு சென்று பைபர் அவரையும் மற்றவர்களையும் மீட்டு வந்தனர். இதனை ட்விட்டரில் பதிவிட்டு விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்து உள்ளார். "என்னை போன்ற மக்களுக்கு உதவி தீயணைப்பு படையினருக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்புப் பணிகள் தொடங்கிவிட்டன. 3 படகுகள் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற சோதனை காலங்களில் தமிழ்நாடு அரசின் சிறப்பான பணி. ஓய்வின்றி உழைக்கும் அனைத்தும் நிர்வாக அதிகாரிகளுக்கும் நன்றி." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+