இயல்பை விட தாமதம்! குட்பை சொன்ன வடகிழக்கு பருவமழை.. 104 நாட்கள் நீடித்து விலகியது.. வானிலை மையம்
சென்னை: 104 நாட்களாக நீடித்து வந்த வடகிழக்கு பருவமழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் இருந்து விலகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 59 செ.மீ. மழை பெய்தது. இது, 2023 ஆம் ஆண்டு பெய்த மழையை விட 33 சதவீதம் அதிகமாகும்.
தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவு வடகிழக்கு பருவமழை மூலமே கிடைக்கும். குடிநீர் தேவை, விவாசயிகளுக்கு தேவையான நீர் ஆதாரம் என வடகிழக்கு பருவமழையை தமிழ்நாடு பெரிதும் சார்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழையினால் தமிழகம் முழுக்கவே நல்ல மழை பெய்தது.

நெல்லை, தென்காசி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 59 செ.மீ., மழை பெய்தது. இது, 2023-ஆம் ஆண்டு பெய்த மழையை விட 33 சதவீதம் அதிகமாகும். வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்புக்கு மாறாக ஜனவரி மாதம் இறுதி வரை நீடித்தது. இந்த நிலையில் தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் இருந்து விலகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 நாட்கள் தாமதம்
வடகிழக்கு பருவமழையின் இயல்பான காலம் முடிந்தாலும் பருவக்காற்று மற்றும் பருவமழை தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த சூழலில் தான் இன்றுடன் மழை விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பாக விலகத்தொடங்கும் நாளை விட 27 நாட்கள் தள்ளி வடகிழக்கு பருவமழை விலகியிருக்கிறது.
தமிழ்நாடு, புதுவை, கேரளா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்தில் கூட கணிசமாக பெய்தது. வழக்கமாக ஜனவரி மாதத்தில் ஒரு செ.மீட்டர் அளவுக்குதான் மழை பெய்யும் என்ற நிலையில் 2 செ.மீட்டருக்கும் அதிகமாக தமிழகம் முழுக்க சராசரியாக பெய்து இருந்தது. இது இயல்பை விட 100 சதவீதம் அதிகமாகும். வடக்கு கிழக்கு பருவக்காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டு வடக்கு திசையில் இருந்து தென்னிந்திய பகுதிகளுக்குள் வறண்ட காற்று வீசி வருகிறது" என்று தெரிவித்துள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications