Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை ஆரம்பிக்குது கத்தரி வெயில்.. அக்னி நட்சத்திரம் அனலைக் கொட்டுமா? இப்பவே கண்ணைக் கட்டுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், நாளை (மே 4) தொடங்குகிறது அக்னி நட்சத்திரம். வரும் மே 28 ஆம் தேதிவரை அக்னி நட்சத்திரம் என்கிற கத்தரி வெயில் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், சமீபகாலமாக அக்னி நட்சத்திர காலகட்டத்தில் பரவலாக பல பகுதிகளில் கோடை மழை பொழிந்து குளிர்ச்சியை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

Agni Nakshatra to Start Tomorrow Heatwave Intensifies Across Tamil Nadu

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது

இந்த ஆண்டில் கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நாளை (மே 4) முதல் மே 28 ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்த காலகட்டத்தின் நடுவில் இருக்கும் ஒரு வாரம் வெயில் கடுமையாக வாட்டி வதைக்கும்.

அக்னி நட்சத்திரம் முடியும் வரை சூரிய வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அதிகப்படியான தண்ணீர் அருந்துவதும், உடல் அதிக சூடு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

அக்னி நட்சத்திரம் என்பது என்ன?

பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் என்றும், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தின் நடுவில் உள்ள ஏழு நாள்கள் வெயில் மிக அதிகமாக இருக்கும்.

இந்து பஞ்சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரத்துக்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன் அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலமாகக் கருதப்படுகிறது.

மக்களே கவனம்

அதிக வெப்பம் நிலவும் கத்தரி வெயில் காலகட்டத்தில் மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது. அதிக வெப்பநிலை வெப்பச் சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கலாம். இது உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம்.

வெப்பமான வானிலை அதிக வியர்வையை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் நீங்கள் போதுமான நீர் ஆகாரங்களை பருகவில்லை என்றால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதீத நீரிழப்பு உடல் செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருந்து உடலைக் காத்துக்கொள்ள வேண்டும்.

மழை பெய்யுமா?

பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், சமீபகாலமாக அக்னி நட்சத்திர காலகட்டத்திலும் பரவலாக பல பகுதிகளில் கோடை மழை பொழிந்து குளிர்ச்சியை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 3) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (மே 4) முதல் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 6 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+