ஆடியா? சித்திரையா? அக்னி நட்சத்திரம் யு டர்ன்.. 13 ஊர்களில் சுட்டெரித்த வெப்பம்.. காரணம் என்ன?
சென்னை: ஆடி மாதத்தில் அனல் காற்றுடன் கூடிய வெப்பம் சுட்டெரித்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சித்திரை மாத அக்னி நட்சத்திரம் ஆடி மாதத்தில் யு டர்ன் ஆகி விட்டதோ என்று நினைக்கும் வகையில் வெயில் சுட்டெரித்ததால் வீடுகளுக்குள் பலரும் முடங்கினர். இந்த மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக வெப்பம் சுட்டெரிப்பது ஏன் என்ற காரணத்தையும் பார்க்கலாம்.
தென்மேற்கு பருவமழை: தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்க வேண்டும். நடப்பாண்டு கேரளாவில் தாமதமாகவே மழை தொடங்கியது. வட மாநிலங்களில் மழை பெய்தாலும் தமிழ்நாட்டில் பெரிதாக மழை கை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத்தில் கரையை கடந்தது. அதன் தாக்கம் பல வாரங்களாகவே நீடிக்கிறது. பருவமழை தவறாது பெய்யும் நீர் நிலைகள் நிரம்பும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழ்நாட்டில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது.

நீர் நிலைகள்: மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரிக்கிறது. நீர் நிலைகள் வற்றத் தொடங்கிவிட்டது. நேற்றைய தினம் பல ஊர்களில் வெப்பம் சுட்டெரித்தது. தமிழகத்தில், ஓரிரு இடங்களில் அதிகபட்சம், 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும். இயல்பில் இருந்து இருந்து, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதல் வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுட்டெரித்த சூரியன்: வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே நேற்று மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இது 106 டிகிரி பாரன்ஹீட் ஆகும். மதுரை நகரம், தூத்துக்குடியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடலூர், நாகை, தஞ்சாவூரில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, திருத்தணி, பரங்கிப்பேட்டை, புதுச்சேரியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
வெப்பநிலை உயர்வுக்கு காரணம்: பொதுவாகவே ஜோதிடத்தில் கிரகங்களின் நகர்வுக்கும் வெயில் அதிகரிப்பு, மழைக்கும் காரணம் கூறப்படும். சித்திரை மாதத்தில் செவ்வாய் கிரகமான மேஷ ராசியில் சூரியன் உச்சமடைவார். சித்திரையில் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் பயணம் செய்யும் போது அக்னி நட்சத்திர காலம் என்பதால் வெயில் சுட்டெரிக்கும். ஆடி மாதமான இப்போது அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிப்பதற்கு ஜோதிட ரீதியான காரணமும் கூறப்படுகிறது.

சிம்ம ராசியில் செவ்வாய்: மேஷ ராசி அதிபதியான செவ்வாய் மற்றொரு நெருப்பு ராசியான சிம்ம ராசியில் தற்போது பயணம் செய்கிறார். சிம்ம ராசி சூரியனின் வீடு. இந்த ராசியில் உத்திரம் நட்சத்திரம் சூரியனின் நட்சத்திரம். இந்த உத்திரம் நட்சத்திரத்தில் தற்போது செவ்வாய் பகவான் பயணம் செய்கிறார். நெருப்பு கிரகம் நெருப்பு ராசியில் உள்ள சூரியனின் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் பொதுவாகவே வெப்பம் அதிகரிக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். பொதுவாகவே சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தாலும் செவ்வாயின் நட்சத்திரமான மீருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் சூரியன் பயணம் செய்யும் போதும் வெப்பநிலை அதிகரிக்கும்.
பரிகாரம் என்ன: ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் இணைந்து இருப்பவர்களுக்கு இந்த காலத்தில் உடல் சூடு தொடர்பான பிரச்சினைகள், கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே செவ்வாய் பகவானுக்கு செவ்வாய் கிழமைகளிலும் சூரிய பகவானுக்கு ஞாயிறுக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபடலாம். கோதுமை மற்றும் துவரையில் செய்த உணவுகளை அன்னதானம் செய்யலாம். வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க எலுமிச்சை ஜூஸ்,ஆரஞ்ச் ஜூஸ் குடிக்கலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications