"அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில்" - அறிவியல்பூர்வமானது அல்ல!- தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை வெயிலின் உக்கிரத்தில் வாடி வதங்கும் பொதுமக்களை இன்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வறுத்தெடுக்கப் போவதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் ஆகியவை அறிவியல் பூர்வமானது அல்ல என்கிறது தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம்.

கோடைகாலத்தில் கத்திரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம்தான் அதி உச்சமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று முதல் மே 28-ந் தேதி வரை கத்திரி வெயில் காலம்.

Agni1

இதனால் தமிழ்நாட்டில் வழக்கமானதைவிட வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கும்; பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கிற அறிவுறுத்தல்களும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகமோ, இது அறிவியல்பூர்வமானதே அல்ல என்கிறது. இது தொடர்பாக உண்மை சரிபார்ப்பகம் தமது எக்ஸ் பக்கத்தில், பொதுவாகவே மே மாதம், கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்; வானிலை மையம் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிக்கைகளை வெளியிடும்.

கத்தரி வெயில் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதாவிடம் கேட்ட போது, கத்திரி வெயில் என்பது அந்தக் காலத்தில் இருந்து பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நம்பப்படுகிற ஒன்று; அது அறிவியல்பூர்வமானது அல்ல. இது குறித்து இந்திய வானிலை மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடாது என தெரிவித்தார் என கூறப்பட்டுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

கத்திரி வெயில், அக்னி நட்சத்திரம் பொதுமக்களை வாட்டி வதைக்கப் போகிறது

முடிவு

சென்னை வானிலை ஆய்வு மையமானது இது அறிவியல்பூர்வமானது இல்லை என்கிறது

ரேட்டிங்

False

பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+