சென்னையில் சுத்தி அடித்த சூறாவளி.. விமான சேவை பாதிப்பு! வானிலேயே வட்டம் - பெங்களூருக்கு டைவர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இடிமின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

"வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Air service has been severely affected due to heavy rain and thunder in Chennai

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்." என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து இருக்கிறது. விடிய விடிய பெய்த மழை இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

இடி மின்னல் மற்றும் சூறைக்காற்று வீசியதன் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இரவு கடுமையான சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பாதுகாப்பு கருதி வானிலேயே வட்டமடித்த விமானங்கள் தாமதமாகவே தரையிறங்கி உள்ளன.

அதில் ஒரு விமானம் தரையிறங்க முடியாத காரணத்தால் பெங்களூரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து கிளம்ப வேண்டிய 8 விமானங்களும் தாமதமாகவே சென்று இருக்கின்றன. இதன் காரணமாக பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

சென்னையில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்தாலும், அதையும் மீறி கனமழை கொட்டியதை விமானிகள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் எனவும், இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் இரவு ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், நந்தனம், மாம்பலம், தியாகராய நகர், அண்ணாநகர், கே.கே.நகர், அசோக் நகர், ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+