வெளுத்து வாங்கும் மழை.. செம்பரம்பாக்கத்தில் கிடுகிடுவென உயரும் நீர்வரத்து.. சென்னை மக்களே அலர்ட்!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. மேலும், விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சென்னையில் அடையாறு கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பபட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை எவராலும் மறந்திருக்க முடியாது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2015 ஆம் ஆண்டு திடீரென இரவு நேரத்தில் நீர் திறக்கப்பட்டதால், கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை மக்கள் சந்தித்தனர்.

வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் நவம்பர் 29ஆம் தேதி காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இரவு 7 மணி முதல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை சுமார் 3 மணி நேரத்திற்கு கொட்டித் தீர்த்தது. சென்னையின் பல்வேறு பகுதியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.42 அடி தண்ணீர் உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ஆம் தேதி காலையில் விநாடிக்கு ஆயிரம் கன அடி திறக்கப்பட்ட நிலையில், மாலையில் ஆயிரத்து 500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட நீர் சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, திருநீர்மலை மற்றும் அனகாபுத்தூர் கால்வாய்கள் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. இதனால், அடையாறு கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட்து. இதேபோன்று, புழல் ஏரியில் இருந்தும் விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நவம்பர் 29ஆம் தேதி காலையில் விநாடிக்கு 1,148 கன அடியாக இருந்த நீர் வரத்து, இரவில், 2,888 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், அடையாறு ஆற்றங்கரையோர சென்னை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications