வேளச்சேரியில் மோசமான நிலைமை.. சென்னை படகு பயன்பாடு எங்கு உள்ளது? மேயர் பிரியா அப்டேட்
சென்னை: சென்னையில் நேற்று முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழை என்பது நாளை இன்னும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த முறையை போல் கால்வாயில் இருந்து குடியிருப்புகளை நோக்கி தண்ணீர் ரிவர்ஸ் முறையில் திரும்ப வராது. இதனை தடுக்க ஷட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குட்நியூஸ் கூறியுள்ள மேயர் பிரியா, தற்போது சென்னையில் வேளச்சேரியில் மட்டுமே படகு பயன்பாடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகநேற்று முதல் தொடர்ந்து சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீரை விரைவாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் ரியல் சேலஞ்ச் என்பது நாளை தான் உள்ளது. அதாவது வங்கக்கடலில் நிலவும் குறைந்த தாழ்வு பகுதி நாளை தான் சென்னையை நெருங்க உள்ளது. இதனால் நாளை சென்னையில் மிக அதிகமாக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வந்த ‛வார்னிங்’.. மழைநீரை கடல் உள்வாங்குகிறதா? மெரினாவில் இப்போது என்ன நிலைமை?
இதற்கு சென்னை மாநகராட்சி முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் திருவிக நகர், கொளத்தூர், மண்டலம் 5ல் ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இந்த மழைநீர் வடிகால்கள் மழையின்போது கைக்கெடுத்து உள்ளது. மழைநீர் வடிகாலில் இருந்து செல்லும் தண்ணீர் கால்வாயில் தான் சென்று சேர்கிறது.
ஒரே இடத்தில் குவியும் மேகம்.. ஆஃபிஸ் போனவங்க சீக்கிரம் வீட்டுக்கு போங்க - வெதர்மேன் ‛வார்னிங்’
இதனால் கால்வாயில் இருந்து தண்ணீர் மீண்டும் திரும்பி வருவதை தடுக்க ஷட்டர் போட்டுள்ளோம். கால்வாயில் இருந்து தண்ணீர் திரும்ப குடியிருப்புக்குள் வராமல் தடுக்கும் பணியை இந்த ஷட்டர் செய்யும். ஷட்டர் காரணமாக திரும்ப தண்ணீர் வராமல் வேகமாக மழைநீர் வடிந்து வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில் போதுமான அளவுக்கு மோட்டார்கள் உள்ளன. 100 எச்பி மோட்டார்கள் 110 மோட்டார்கள் உள்ளது. ஆனாலும் டிராக்டர் மோட்டார்கள் தேவை என்று கூறியுள்ளனர். இதனை பிற இடங்களில் இருந்து கொண்டு வந்துள்ளோம். வேளச்சேரியில் மட்டுமே தற்போது படகு பயன்பாடு உள்ளது. அதேபோல் கூடுதலாக மண்டல வாரியாக படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்னும் யாரும் எடுத்து பயன்படுத்தவில்லை. மண்டலம் 4, மண்டலம் 2, மண்டலம் 6ல் தயார் நிலையில் படகு உள்ளது.
பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க 1913 என்ற ‛டோல் ஃப்ரீ’ எண்ணை வழங்கி உள்ளோம். கட்டுப்பாட்டு அறையில் 100 பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 2 ஆயிரம் போன்கால் வருகிறது. தெருவிளக்கு எரியவில்லை. தண்ணீர் தேங்கி நிற்கிறது என புகார் அளித்து வருகின்றனர். உடனடியாக அதிகாரிகள் சென்று சரிசெய்து வருகின்றனர். அதேபோல் போன்கால் கனெக்ட் ஆகாவிட்டாலும் கூட அந்த ஆப்பில் எங்களுக்கு எச்சரிக்கை செய்யும். இதையடுத்து கனெக்ட் ஆகாத அந்த எண்ணை எடுத்து நாங்கள் மீண்டும் தொடர்பு கொண்டு குறைகளை சரிசெய்து வருகிறோம்’’ என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications