ஒரே இடத்தில் குவியும் மேகம்.. ஆஃபிஸ் போனவங்க சீக்கிரம் வீட்டுக்கு போங்க - வெதர்மேன் ‛வார்னிங்’
சென்னை: சென்னையில் நேற்று முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று மதியம் 12.23 மணிக்கு தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். மேகங்கள் வலுவிழப்பதாக நினைக்கவில்லை. ஒரே இடத்தில் மேகங்கள் குவிந்து இருக்கிறது. இதனால் இன்று அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரம் வீடு திரும்புவது நல்லது என அட்வைஸ் வழங்கி உள்ள அவர் இன்றும், நாளையும் என்ன நடக்கும்? என்பது பற்றி வார்னிங்கை செய்துள்ளார்.
சென்னையில் இன்றும், நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில் தான் தமிழ்நாடு வானிலை நிலவரம் பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவலை குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் மதியம் 12.23 மணிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛மேகங்கள் வலுவிழப்பதாக நான் நினைக்கவில்லை. மாறாக ஒரே இடத்தில் மேகங்கள் குவிந்து அப்படியே இருக்கிறது. இது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. அதாவது மழைக்கு இடைவெளி இருக்காது என்பதை தான் இது காட்டுகிறது.
மேகங்கள் ஒரே இடத்தில் குவியதால் குறைந்தபட்சமாக அடுத்த 3 மணிநேரத்துக்கு அதிக மழை என்பது இருக்கும். இதனால் அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரமாக கிளம்புவது நல்லது. ஏனென்றால் நாளையும் மழை அதிகமாக இருக்கலாம். அதோடு சென்னையில் நள்ளிரவில் இருந்து சில இடங்களில் 200 மிமீ மழை பெய்துள்ளது'' என கூறியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேனின் இந்த பதிவுக்கு காரணம் வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தான் காரணம். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையவும் வாய்ப்புள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது நாளை சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் மிக கனமழை என்பது பெய்ய உள்ளது. இன்றும், நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் என்பது விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாளை தினம் சென்னையை காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்க உள்ளது. இதனால் நேற்று மற்றும் இன்றைய தினத்தை காட்டிலும் நாளை மழை அதிகரிக்கலாம். அதோடு குறிப்பாக இன்று மாலை முதல் மழை தொடர்ந்து பெய்ந்து மிக கனமழையாக நாளை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு வெதர்மேன் இந்த பதிவை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications