யாருமே எதிர்பார்க்கவில்லை.. அதிகாலையில் கடும் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்.. டிராபிக் ஜாம்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இன்று அதிகாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு வெளிவட்ட சாலை மற்றும் நகரின் சில பகுதிகளில் உள்ள சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் டிராபிக் மோசமாக இருக்கும் நிலையில், வாகன ஓட்டிகளில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். டிராபிக்கை சீர் செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. பல மாதங்களுக்கு அங்கு மழையே இல்லாத அளவுக்கு நிலைமை இருந்தது.

இதனால் தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், கர்நாடக அரசு பல கட்டுப்பாடுகளைக் கூட அறிவித்து இருந்தது. ஆனால், இப்போது அங்கே நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது.
மழை நீர்: பெங்களூரில் இன்று அதிகாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் இன்று டெக் சிட்டி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.. மழை நீர் தேங்கியதில் கடுமையான டிராபிக் நெரிசல் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து போலீசார் இது தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். சாலைகளில் நீர் தேங்கி இருப்பதால் காலையில் ஆபீஸ் செல்ல முடியாமல் பெங்களூர்வாசிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
There is heavy rain in Bengaluru, which is causing a traffic jam#BengaluruRains @thatsTamil pic.twitter.com/HahEEYKSDT
— Veerakumar (@Veeru_Journo) August 12, 2024
டிராபிக் பாதிப்பு: நாகவரா சந்திப்பு மற்றும் ஹெப்பால் இடையே வெளிவட்ட சாலை (இரு மார்கத்திலும் டிராபிக் மோசமாக இருக்கிறது), ஹெப்பால் மேம்பாலம் (எஸ்டீம் மாலில் இருந்து மெக்ரி வட்டம் மார்கத்தில் டிராபிக் நிலவுகிறது), சி சிட்டி சாலையில் வீரசந்திரா உயர்த்தப்பட்ட சாலை, மாரத்தஹள்ளி, கார்த்திக் நகர், மற்றும் கல்யாண் நகர், புட்டனஹள்ளி, வர்தூர் கோடி மற்றும் சக்ரா மருத்துவமனையிலிருந்து பெல்லந்தூர் வரையிலான வெளிவட்ட சாலை பகுதிகளில் டிராபிக் அதிகம் இருப்பதாக டிராபிக் போலீசார் கூறுகின்றனர்.
#BengaluruRains pic.twitter.com/Y43GfRHBig
— Veerakumar (@Veeru_Journo) August 12, 2024
மேலும், பன்னர்கட்டா சாலையில் உள்ள ஜெயதேவா அண்டர்பாஸ், சில்க் போர்டு அருகே உள்ள ரூபேனா அக்ரஹாரா, பாணத்தூர் ரயில்வே சுரங்கப்பாலம், எலஹங்காவை நோக்கிச் செல்லும் எம்எஸ் பால்யா சாலை ஆகிய இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. மெட்ரோ பணிகள் மற்றும் வாகனங்கள் திடீரென பழுதடைந்து நிறுத்தப்படுவதும் பல பகுதிகளில் டிராபிக் பாதிப்பை மோசமானதாக மாற்றி இருக்கிறது.

நல்ல மழை: பெங்களூரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலை 6.30 மணிவரையிலான நிலவரப்படி, 7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் கர்நாடகா வெதர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பெங்களூர் நகரில் அதிகாலை 2:30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.. 3- 4 மணிநேரம் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெளிவட்ட சாலை மற்றும் ஒரு சில சுரங்கங்கள் உட்பட நகரின் சில பகுதிகளில் உள்ள சாலைகளில் நீர் தேங்கியுள்ளது" எஎன்று பதிவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications