வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. அடுத்த 48 மணி நேரத்தில் ‘அர்னாப்’ புயலாக மாறும் என கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் 'அர்னாப்' புயலாக மாறும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather rain cyclone

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் மழை கணிசமாக மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான நிலையில் அது இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வங்கக்கடலில் புயலாக மாறி ஆந்திராவில் கரையைக் கடக்கும். இதனால் தமிழகத்தினை ஒட்டியுள்ள வங்கக்கடலில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த காற்று வீச என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சுமார் 1.5 கிமீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இன்று திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடலில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கு கடல் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலில் உள்ள விசைப்படகுகள் மற்ற விசைப்படகுகளின் மீது மோதி சேதமடையாமல் இருக்கு நன்றாக இடைவெளி விட்டு நிறுத்தவும். நாட்டுப்படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக கரையில் நிறுத்தவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+