தமிழகத்தில் ஜில்லுன்னு வரப்போகும் மழை.. அதுவும் எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ஆய்வாளர்கள் தகவல்
சென்னை: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மே 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை உக்கிரமாக வீசும் என்றும் உள்மாவட்டங்களில் 5-ந் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம் ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும் என்றும் மே 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் பங்குனி பிறந்தத்தில் இருந்தே உக்கிரமாக இருக்கிறது. சென்னையில் எல்லாம் மாசி மாதத்திலேயே வெயில் வேலையை காட்ட ஆரம்பித்தது. இப்போது தமிழகத்தில் சென்னையை விட மற்ற மாவட்டங்களில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. கடந்த 2 வாரங்களாக இயல்பைவிட அதிகளவில் வெயில் காணப்படுகிறது.
சேலம், ஈரோடு பகுதிகளில் தான் தமிழகத்தில் அதிகபட்ச வெயில் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெப்பம் தமிழகத்தில் பதிவாகி தொடங்கி உள்ளது. ஈரோடு, சேலத்தில் 108, 109 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் வருகிற 30-ந் தேதி வரை இயல்பை விட வட உள் மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதாவது, 5 முதல் 9 பாரன்ஹீட் டிகிரி வரையிலும், உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ், அதாவது, 4 பாரன்ஹீட் டிகிரி வரையிலும் வெப்பம் அதிகரித்து காணப்படும்.
அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெயில் பதிவாகக்கூடும். மேலும் வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), அடுத்த மாதம் (மே) 1 மற்றும் 2-ந் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை, அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற இடங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
மே மாதம் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை உக்கிரமாக வீசக்கூடும். அதன் பின்னர், உள் மாவட்டங்களில் 5-ந் தேதிக்கு பிறகு கோடை மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று வானிலை மையம் மற்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications