நெல்லை மீட்பு பணி: களத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் -வெடித்த சர்ச்சை!
சென்னை: திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இணைந்து பணியாற்றியது சர்ச்சையாக வெடித்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் வரலாறு காணாத பெருமழை கொட்டியது. இப்பெருமழையால் குளங்கள் நிரம்பின; அணைகள் நிரம்பின; உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான கன அடிநீர் பாய்ந்தோடியது. இப்பெருவெள்ளத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்து தனித்தனி தீவுகளாகின. இம்மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது.

மாரி செல்வராஜ் ட்வீட்: இந்த நிலையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தமது சொந்த ஊரான புளியங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தத்தளித்து வருவதை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதில், வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

களத்தில் மாரி செல்வராஜ்: மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் இணைந்து மீட்பு பணிகளிலும் பணியாற்றினார். மேலும் "கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர் .வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது... நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்... மீள்வோம்" எனவும் சமூக வலைதளங்களில் படங்களும் பதிவிட்டிருந்தார்.

பாஜக கேள்வி: இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டது சர்ச்சையாக வெடித்துள்ளது. பாஜகவினர் "உதயநிதி வச்சு படம் பண்ணினால், இவ்ளோ அதிகாரம் யார் கொடுத்தார்கள்?" என மாரி செல்வராஜ் பேட்டிக்கு எதிராக கேள்வி எழுப்பினர். அதேபோல "Dear Mr. @Udhaystalin sir can you please explain what's the role for Mari Selvaraj here? Is he a IAS, minister or govt official? Why is he with you when you're going for official government work? எனவும் கேள்வி கேட்டிருந்தனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தமது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நிற்பது குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

எது பிடிக்கவில்லை?: இதற்கு திமுகவினரும் சமூக வலைதளங்களில் பதிலடியாக "மாரி செல்வராஜ் உதயநிதி கூட நின்னு உதவி செய்யறது கஷ்டமா இருக்கா இல்ல மாரி செல்வராஜ் உதவி பன்றது புடிக்கலையா" என்றும் "சென்னை நடிகர்கள் சென்னை மக்களுக்கு உதவுறது சரின்னா, தனது சொந்த மாவட்டமான திருநெல்வேலி மக்களுக்கு மாரி செல்வராஜ் உதவுறது மட்டும் எப்படி தவறாகும்?" எனவும் பதில் எழுப்புகின்றனர்.

உங்களுக்கு என்ன பிரச்சனை?: திமுகவின் கவிஞர் சல்மா தமது எக்ஸ் பக்கத்தில், மாரி செல்வராஜ் தன் கிராமத்து மக்களுக்கு உதவி செய்வதற்காக களத்தில் நிற்பதை பார்த்து கேலி செய்கிறார்கள். ஓராயிரம் மக்கள் ,என்ஜிஓக்கள் தனியாகவும்,அரசோடும் ,கட்சியோடும் இணைந்து கொண்டு உதவுகிறார்கள். உங்களுக்கு என்ன பிரச்னை? என பதில் கொடுத்துள்ளார்.

-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications