அடுத்த 3 மணி நேரம்.. வெயிலே இருக்காது.. பிச்சு உதறப்போகும் மழை.. சென்னை + 17 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை மற்றும் இரவில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோவை என 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் சீசன் நடந்து வந்தாலும் பெரும்பாலான நாட்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை கொளுத்தி எடுத்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியிருந்தாலும் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியினை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரிதாக வெயில் பதிவாகவில்லை.

17 மாவட்டங்கள் என்னென்ன?
பல நாட்களில் கோடை மழையே பெய்துள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடனும், ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. நேற்று மாலை மற்றும் இரவு கூட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொளுத்தி எடுத்தது. புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருப்பத்தூர், சேலம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காரைக்கால் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது.
இன்றும் தமிழகத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
"தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, கோவை, தேனி மற்றும் திருப்பூர் ஆகிய 17 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இன்று எங்கு மழைக்கு வாய்ப்பு
முன்னதாக இன்று 13 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22 ஆம் தேதி வரை
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாளை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மே 21ம் தேதி மற்றும் மே 22ம் தேதி அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையை பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications