தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்துக்கு மழை இருக்கு.. எங்கெல்லாம் தெரியுமா? சென்னை வானிலை மையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சில நேரங்களில் வெயில் அடிக்கிறது. சில நேரங்களில் வானம் இருண்டு மழை பெய்கிறது. இதனால் தென் மாவட்டங்கள் சற்று குளிர்தே காணப்படுகிறது. எனினும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Chance of rain at various places in Tamil Nadu for the next one week Chennai Meteorological Center

ஒரு வாரத்திற்கு: 37 - 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்து வருகிறது. தேனி, தஞ்சாவூர், இராமநாதபுரம், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தேர்தல் நாளில் எப்படி?: நாளை புதன்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மறுநாள் மற்றும் 19. 04. 2024 அதாவது லோக்சபா தேர்தல் நாளன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20. 04. 2024 முதல் 22. 04. 2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று தெரிவித்துள்ளது.

இதேபோல், அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° 3° செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

வெப்பநிலை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°-40° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34°-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

18 முதல் 20 ஆம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலையாக தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2° -4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°- 41° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையில் எப்படி?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

மழை அளவு: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

பாபநாசம் (திருநெல்வேலி) 6, சேர்வலாறு அணை (திருநெல்வேலி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்) தலா 4, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), ஊத்து (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 3, மணிமுத்தாறு (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி),

மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 2, சூரங்குடி (தூத்துக்குடி) 1, பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) 1, குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), போடிநாயக்கனூர் (தேனி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), கமுதி (ராமநாதபுரம்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 1.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37° 40° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33° - 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19° -29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 40.2° செல்சியஸ் மற்றும் சேலத்தில் 39.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.0° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+