அடுத்த 1 மணி நேரம்.. விருதுநகர், ராமநாதபுரம் உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும், தேனி உள்பட 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு ஒருசில இடங்களில் மழையும், ஒருசில இடங்களில் இயல்பை விட வெயில் அதிகமாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

chance-of-rain-in-11-districts-in-the-next-1-hour-imd


11 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில், அதாவது இன்று இரவு 7 மணி வரை சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல் திண்டுக்கல், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஒரு வாரம்

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தொடங்கி 28 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று (ஜூன்.22) தொடங்கி, ஜூன்.26 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

சென்னையில் கிளைமேட் எப்படி

சென்னையில் இன்று (22-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (23-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

பதிவான மழை அளவு (செமீ):

* அவலாஞ்சி (நீலகிரி) 2,
* சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்). பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), பொன்னை அணை (வேலூர்) தலா 1.

வெப்பநிலை நிலவரம்:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+