மதுரை, குமரி உள்பட 12 மாவட்டங்கள்.. அடுத்த 2 மணி நேரம் கொட்டப்போகும் மழை! குடையை ரெடியா வச்சிக்கோங்க
சென்னை: தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை, மதுரை, சிவகங்கை, குமரி, விருதுநகர் உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் தென்காசி, குமரி, நெல்லை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்காசி, குற்றாலம், கடையம் பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது.

எனினும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயில் அடித்து வருகிறது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 100 டிகிரி செல்சியஸ் பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது. இதேபோல் இனி தமிழகத்தில் படிப்படியாக வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், " தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது அதாவது ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மழையினால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (24. 05. 2024) காலை 05:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச-கேப்புப்பாராவிலிருந்து சுமார் 730 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும் மற்றும் மேற்குவங்காள- கேன்னிங்-லிருந்து சுமார் 750 கி.மீ தெற்கேயும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து , புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
அதன் பிறகு, இது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக 25.05.2024 இரவு வலுப்பெற்று, 26.05.2024 நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை கடக்க கூடும். தெற்கு கேரள மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று மே 24ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications