இரவு 7 மணி வரை.. இடி மின்னலுடன்.. சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 7 மணி சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இன்று மாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடைக்காலம் என்பது மறந்து போகும் அளவுக்கு கடந்த இரண்டு நாட்களாக கிளைமேட் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதேபோல் நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications