மீண்டும் ஆரம்பிக்குது? அடுத்த 2 மணி நேரம்.. கடலூர், விழுப்புரம் + 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்பட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை இன்னும் விட்டபாடில்லை. வங்க கடலில் கடந்த 25 ஆம் தேதி உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று 29 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக மாறியது. தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நகரத்தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன் தினம் மாலை இந்த புயல் கரையை கடக்க தொடங்கியது.

ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுவை அருகே கரையை கடக்க தொடங்கியதும், பலத்த சூறைகாற்றுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது. 11.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் முழுவதுமாக கரையை கடந்தது. எனினும் விழுப்புரம், கடலூர், புதுவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து இன்று வரை விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூரில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மழை நீர் வடியாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் மழை எப்போது விடும், மழை வெள்ளம் எப்போது வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்று இரவு 10 மணி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கோவை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, ஈரோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கும் புதுச்சேரியிலும் லேசான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications