மக்களே அலர்ட்! அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்.. வானிலை மையம்
சென்னை: சென்னை உள்பட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, இரவு நேரத்தில் திடீர் மழை பெய்வதும் வாடிக்கையாக உள்ளது. அதேபோல் உள் மாவட்டங்களில் மாலை நேரங்களில் திடீர் மழை பெய்வதை காண முடிகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:- தமிழகத்தில் கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் கூறியிருந்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைநதபட்ச வெப்ப நிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications