அடுத்த 1 மணி நேரம்.. சென்னை டூ தென்காசி வரை.. 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை முதல் தென்காசி வரை 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்க கடலில் கடந்த 25 ஆம் தேதி உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று முன் தினம் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இதனை தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நகரத்தொடங்கியது. முதலில் 17 கிமீ வேகம், அடுத்து 15 கிமீ வேகம், 13 கிமீ வேகம், அடுத்து 10 கிமீ வேகத்தில் நகர்ந்தது.

நேற்று மாலை 5.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியது. மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுவை அருகே புயல் கரையை கடக்க ஆரம்பித்தது. தொடர்ந்து 6 மணி நேரத்து பின் 11.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கடல் அலைகளும் ஆக்ரோசமாக காணப்பட்டன.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனால் விழுப்புரம், கடலூர், புதுவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. புதுவையில் அதிகபட்சமாக 48 செமீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 27 செமீ மழை பெய்தது. மயிலத்தில் அதிபட்சமாக 49 செமீ மழை பதிவாகியது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. குறிப்பாக பாண்டியன் நகர், சர்வேயநகர், வில் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக 1000 ஏக்க பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமைடைந்தன. முள்ளிப்பாட்டு, மலையாம்பட்டு, புங்கம்பாடி, களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்தன.
27 மாவட்டங்கள்: சேலம் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சேலம் விமான நிலையத்தில் முக்கிய நாடுகளுக்கு செல்லும் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தொடர்ந்து தற்போது வரை மழை வட மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட்: வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்று இரவு 7 மணி வரை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது.
ஆரஞ்ச் நிற அலர்ட்: இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற அலர்ட்: இதேபோல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், பெரம்பூர், திருச்சி, ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications