அடுத்த 3 மணி நேரம்.. கொட்டப்போகும் மழை.. சென்னை, செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொஞ்சம் தாமதமாக தொடங்கியது. மேலும் ஆரம்பத்தில் குறைவான மழையே இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

Chance of rain in 4 districts including Chennai, Chengalpattu in next 3 hours, meteorological department

தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது மதியம் 12 மணி வரை தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+