வெயிலுக்கு பிரேக் கொடுக்கும் மழை! அடுத்த 3 மணி நேரம்! 6 மாவட்டங்களில் கொட்டப்போகுது.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ள நிலையில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெளியில் சென்றாலே அனலாக வெப்பம் தகிக்கிறது என்றும், வியர்த்து கொட்டுகிறது என்றும் மக்கள் தவிக்கின்றனர். அக்னி நட்சத்திரம் இன்னும் ஆரம்பம் ஆகாத நிலையிலேயே வெயில் இப்படி கொளுத்தி எடுப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

6 மாவட்டங்களில் மழை
எனினும் ஒருசில நாட்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் குறைந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் தான் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- " தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் வெயில் சதமடித்தது. வேலூரில் அதிகபட்சமாக 104.18 டிகிரி வெயில் பதிவானது. கரூர்- 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்), ஈரோடு- 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்), திருச்சி- 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்), தஞ்சாவூர்- 102.2 டிகிரி (39 செல்சியஸ்), சேலம்- 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்), திருப்பத்தூர்- 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்), மதுரை- 101.12 டிகிரி (38.4செல்சியஸ்),
திருத்தணி- 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), தர்மபுரி- 100.4 டிகிரி (38 செல்சியஸ்) என 10 இடங்களில் வெயில் பதிவாகியிருந்தது.
-
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இயற்கை அரக்கன்! இந்தியாவை தாக்கும் மான்ஸ்டர் எல் நினோ.. மாபெரும் பஞ்சம் ஏற்படுமாம்.. அதிர்ச்சி தகவல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications