இன்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கும்? வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று வெப்பநிலையை பொறுத்தவரை தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாறி மாறி கிளைமேட் இருந்து வருகிறது. காலையில் வெயில் கொளுத்தி எடுத்தும், மதியத்திற்கு பிறகு மழை பெய்வதுமாக கிளைமேட் மாறுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மற்றும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.

Weather Rain Chennai

நேற்று கோவை, தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. கோவை மேட்டுப்பாளையம், பெரியபாளையம், தேனி பெரியகுளத்தில் தலா 5 செ மீ அளவுக்கு மழை பெய்தது. இதேபோன்று தென் மாவட்டங்களில் நெல்லையில் நேற்று பரவலாக மழை பெயதது. ஊத்து, மாஞ்சோலை, சேரன்மாதேவி, பாபநாசம், களக்காட்டில் பரவலாக மழை பெய்தது. இதனால் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

அணைகள், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என்றாலும், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அறுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகம் உள்ளிட்ட தென் மாநில பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றின் சந்திப்பு நிலவுகின்றது. இதேபோன்று பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

25-03-2025 மற்றும் 26-05-2025 வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 27-03-2025 முதல் 29-03-2025 வரை; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதேபோன்று வெப்பநிலையை பொறுத்தவரை குறைந்தபட்ச வெப்பநிலை இன்று இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் குறையும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+