இன்று முதல் 3 நாட்கள்.. சுட்டெரிக்கும் வெயிலுக்கு "குட் பை" மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் போல வெப்பம் தகித்து வரும் நிலையில் வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு மக்களை கொஞ்சம் ஜில் அடைய வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கிய வடகிழக்கு பருவமழை, கடந்த ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முந்தது. இதன் பின்னர் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதன் பின்னர் தற்போது வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கோடைக்கு இணையாக வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட கோடை மழை எப்போது பெய்யும் என மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், கொளுத்தும் வெயிலில் இருந்து ஒரு 3 நாட்கள் தப்பிக்க முடியும் என்ற வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு ஜில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
20.03.2024 முதல் 23.03.2024 வரை:
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
24.03.2024 மற்றும் 25.03.2023:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
19.03.2024 மற்றும் 20.03.2024:
தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும்.
19.03.2024 முதல் 21.03.2024 வரை:
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் எப்படி?:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications