சென்னையில் இன்று மழை கொட்டப் போகுது.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதேபோன்று சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாகவே வெயிலும் மழையும் என மாறி மாறி கிளைமேட் நிலவி வருகிறது. ஒருசில இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோவை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை உள்பட ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

rain chennai summer

இன்று மழைக்கு வாய்ப்பு

வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.

இன்று 08-05-2025 மற்றும் 09-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-05-2025 முதல் 13-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழைக்கு சான்ஸ்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

இன்று முதல் 09-05-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 10-05-2025 மற்றும் 11-05-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில பகுதிகளில் சற்று உயரக்கூடும். இன்று முதல் 09-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

10-05-2025 மற்றும் 11-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று 08-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

மழை அளவு (செமீ)

* தம்மம்பட்டி (சேலம்) 11,
* திருத்தணி (திருவள்ளூர்) 8,
* திருப்புவனம் (சிவகங்கை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), விருதுநகர் (விருதுநகர்), சாத்தூர் (விருதுநகர்) தலா 7,
* செஞ்சி (விழுப்புரம்), கல்லந்திரி (மதுரை), திருப்பத்தூர் (சிவகங்கை) தலா 6 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+