வெயிலை மறந்துடுங்க.. இனி ஃபுல்லா மழை தான்.. அடுத்த 3 மணி நேரம்.. கொளுத்த போகும் மழை.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று, நேற்று முன் தினம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் இன்றும் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெயிலில் இருந்து எப்படி தப்பிக்க போகிறமோ என மக்கள் அச்சப்பட்ட சூழலில், நாளை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாலை நேரங்களில் மழை
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் காலையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. ஆனால் மாலை 4 மணிக்கு பிறகு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான, நெல்லை, தென்காசியில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று தென்காசி மாவட்டத்தின் கடையம், சம்பன்குளம், ஆழ்வார்குறிச்சி, தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
பகல் முழுவதும் வெயில் அடித்துவிட்டு, மாலை திடீரென மழை கொட்டியதால் அவசர வேலைக்காகல் வெளியில் சென்றவர்கள் எல்லாம் நனைந்தபடியே வீட்டிற்கு வந்ததை பார்க்க முடிந்தது. இதேபோன்று நீலகிரி, கொடைக்கானல், தேனி, திண்டுக்கல், கோவை என மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இடி, மின்னலுடன் மழைக்கு சான்ஸ்
இந்நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கன முன்னறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9 மாவட்டங்களில் கனமழைக்கு சான்ஸ்
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ன் மே. 5 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக 5 ஆம் தேதி கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 9 ஆம் தேதி வரை
இதேபோன்று மே மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் என 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மே 7 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9 ஆம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. மே.5 முதல் 7ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் சற்று 2-3° செல்சியஸ் குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மே.5 முதல் 7 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
குறிப்பாக இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மே.5 முதல் 7 வரை எச்சரிக்கை ஏதுமில்லை. வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 7ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை அளவு செமீ
குழித்துறை (கன்னியாகுமரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), கோடநாடு (நீலகிரி) தலா 5,
கருப்பாநதி அணை (தென்காசி), ஒசூர் AWS (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 4, திருவாரூர் AWS (திருவாரூர்), கடனா அணை (தென்காசி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), தம்மம்பட்டி (சேலம்), மேலாலத்தூர் (வேலூர்), சங்கரன்கோயில் (தென்காசி), திருச்சுழி (விருதுநகர்), குன்னூர் (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), பாலக்கோடு (தர்மபுரி), பாலகோடு ARG (தர்மபுரி) தலா 3.
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), திருவாரூர் (இருவாரூர்), குன்னூர் PTO (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), குன்னூர் AWS (நீலகிரி), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), புதுச்சத்திரம் (நாமக்கல்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி). அருப்புக்கோட்டை (விருதுநகர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), பர்லியார் (நீலகிரி), தர்மபுரி PTO (தர்மபுரி), போடிநாயக்கனூர் (தேனி), குடியாத்தம் (வேலூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), ஒசூர் (கிருஷ்ணகிரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), மடத்துக்குளம் (திருப்பூர்), பி.என்.பாளையம் ARG (கோயம்புத்தூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 2 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications