குடை அவசியம்! இடி, மின்னலுடன்.. சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக தலைநகர் சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. எனினும் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வெயில் மழை என கிளைமேட் மாறி மாறி இருந்து வருகிறது. இன்று அதிகாலையில் இருந்தே தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக சென்னையில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று முன் தினம், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (11-04-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் வழுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (12-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: இன்று முதல் 14-04-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை ஏனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். வரும் 15-04-2025 அன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும். இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மேலும் இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 12-04-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 13-04-2025 முதல் 15-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்: 12-04-2025 முதல் 15-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்: 12-04-2025 முதல் 15-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
மழை நிலவரம்:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை) 6, எண்ணூர் AWS (திருவள்ளூர்) 4, பாரூர் (கிருஷ்ணகிரி), வேலூர் (வேலூர்) தலா 3, மண்டலம் 03 மாதவரம் (சென்னை), உசிலம்பட்டி (மதுரை), செங்குன்றம் (திருவள்ளூர்), பாலகோடு ARG (தர்மபுரி), காட்பாடி (வேலூர்), பாலக்கோடு (தர்மபுரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை) தலா 2,
மண்டலம் 06 கொளத்தூர் (சென்னை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), மங்களபுரம் (நாமக்கல்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), மண்டலம் 03 புழல் (சென்னை), மண்டலம் 07 அயப்பாக்கம் (சென்னை), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), நாகர்கோயில் (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), அம்முண்டி (வேலூர்) தலா 1. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இயற்கை அரக்கன்! இந்தியாவை தாக்கும் மான்ஸ்டர் எல் நினோ.. மாபெரும் பஞ்சம் ஏற்படுமாம்.. அதிர்ச்சி தகவல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications