தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி? வானிலை மையம்
சென்னை: தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக ஓரிரு இடங்களில் அதிக வெப்பநிலையும், ஈரப்பதமும் நிலவுவதால் அசகவுரியம் ஏற்படலாம் என்றும் அலர்ட் செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கோடைக்காலம் தொடங்கியது. ஆனால் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, கடந்த பிப்ரவரி மாதமே வெயில் உக்கிரம் காட்ட தொடங்கியது. அப்போதே பல இடங்களில் வெயில் சதம் அடித்தது. இதனால் கோடைக்காலம் தொடங்கும் முன்பே இப்படி வெயில் கொளுத்துகிறதே, கோடைக்காலத்தில் எப்படி இருக்குமோ என மக்கள் அஞ்சினர்.

அக்னி நட்சத்திரம்
ஆனால் கோடைக்காலம் ஆரம்பித்ததும் சில நாட்கள் வெயில் சுட்டெரித்தாலும், வங்கக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அவ்வப்போது தமிழகத்தில் கோடை மழை பெய்தது. இதனால் பெரிய அளவில் வெயில் தெரியவில்லை. எனினும் வடகிழக்கு மாவட்டங்களில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் வரும் மே 4 முதல் ஆரம்பிப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலை நினைத்து மக்கள் திகைத்து போய் உள்ளனர். இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் மே 3 ஆம் தேதி வரை இயல்பு நிலையில் இருந்து கூடுதலாக 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
சென்னையில் வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. புதுவை, காரைக்காலிலும் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் என்றும், அதிகபட்சமாக சென்னையில் 37 - 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதேபோன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிக வெப்பநிலையும், ஈரப்பதமும் இருக்கும் என்பதால் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நேற்று தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்ற முன்னறிவிப்பில் சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
இடி,மின்னலுடன் மழைக்கு சான்ஸ்
"லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 29-04-2025 மற்றும் 30-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01-05-2025 முதல் 03-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04-05-2025 மற்றும் 05-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, இன்று (29-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையில் நாளை (30-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அசௌகரியம் ஏற்படலாம்
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 29-04-2025 முதல் 02-05-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
03-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
29-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
30-04-2025 முதல் 03-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
29-04-2025 முதல் 01-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications