யூடர்ன் போட்டு திரும்ப வரும் மழை மேகங்கள்.. சென்னை உட்பட 10 மாவட்டங்களில் நைட் வரை நல்ல மழை இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இப்போது மழை குறைந்துவிட்ட போதிலும் கூட இன்னுமே கூட மாலை நேரங்களில் பல பகுதிகளில் கணிசமான மழை பெய்தே வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் உட்பட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

எப்போதும் மே மாதம் தமிழ்நாட்டில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக மழையே அதிகம் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் கூட மழை கொட்டியிருந்தது. அதேநேரம் மே மாதம் முடிந்த பிறகு மழையும் முடிந்துவிட்டது. இப்போது மாநிலத்தில் மெல்ல வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

Chennai and 10 districts will get good rain for next three hours

7 மாவட்டங்களில் மழை கொட்டும்

அதேநேரம் இன்னுமே கூட மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்தே வருகிறது. இதற்கிடையே சென்னை உட்பட 10 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எந்த மாவட்டங்கள்

கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இனி சில மாதங்கள் மழை இருக்காது என நினைத்த மக்கள், குறிப்பாகச் சென்னைவாசிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது.

வானிலை மையம்

முன்னதாக இன்றைய தினம் வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் ஜூன் 9 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜூன் 10ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கைப் பொறுத்தவரை இன்று முதல் ஜூன் 6 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

சென்னை கிளைமேட்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (ஜூன் 4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளைய தினம் (ஜூன் 4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+