சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோடை மழை தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்க தொடங்கியிருக்கிறது. அடித்த வெயிலுக்கு இந்த மழை மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி இருக்கையில், அடுத்த 2 மணி நேரத்தில், சென்னை உட்பட 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முன்னதாக இன்று மாலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்திருந்தது. இதனை தொடர்ந்து சென்னைக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் அறிவிப்பில்,

- கோயம்புத்தூர்
- தருமபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- நாமக்கல்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
- ராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தேனி
- நீலகிரி
- திருவள்ளூர்
- தூத்துக்குடி
- திருச்சிராப்பள்ளி
- திருநெல்வேலி
- செங்கல்பட்டு
- சென்னை
- விழுப்புரம்
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications