சென்னையின் பல பகுதிகளில் நள்ளிரவில் கொட்டிய கனமழை.. எல்லா இடங்களிலும் அடித்து தூக்கிய சூறாவளி காற்று
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் சேர்த்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து இருக்கிறது. நள்ளிரவில் திடீரென பலத்த காற்றுடன் பெய்த இந்த மழையை யாருமே எதிர்பார்க்கவில்லை.. சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த இந்த திடீர் மழையால் நகரில் வெப்ப நிலையில், கணிசமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெப்பம் நம்மைப் படுத்தி எடுத்தது. வெப்பம் உச்சம் தொட்ட நிலையில், மதிய நேரங்களில் வெளியே கூட செல்ல முடியாத சூழலே நிலவியது.

அதன் பிறகு ஜூன் முதல் வாரத்தில் வெப்பம் குறைந்த நிலையில், மாநிலத்தில் பரவலாக மழை பெய்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பெரியளவில் மழை இல்லை. சாரல் மழையே இருந்தது.
மழை: சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த ஓரிரு நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலையே இருந்தது. வெப்பமும் கூட அதிகரித்தது. இந்தச் சூழலில் நேற்றிரவு சென்னையில் வானிலை மொத்தமாக மாறியது. திடீரென அதிவேகமான காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. முதலில் கொஞ்ச நேரம் அதிவேகத்தில் காற்றடித்த நிலையில், பிறகு மழையும் கொட்டி தீர்த்தது. சென்னை மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
கொட்டி தீர்த்த மழை: சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல பல்லாவரம், ஆலந்தூர், அமைந்தக்கரை, அயனாவரம், செங்கல்பட்டு, எழும்பூர், கிண்டி, மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், தாம்பரம், திருவொற்றியூர், வண்டலூர், வேளச்சேரி பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இப்படி ஒரு மணி நேரத்திற்கு மேலாகச் சென்னை நகர்ப் பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் காலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ச்சியான வானிலையே காணப்பட்டது. மேலும், இரவு பெய்த கனமழையால் சில இடங்களில் மின் இணைப்பும் கொஞ்ச நேரம் துண்டிக்கப்பட்டது. மேலும், முக்கிய சாலைகளில் மழை நீரும் தேங்கியுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இன்று முதல் ஜூன் 18 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 19 முதல் ஜூன் 22 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications