வெள்ளம்.. சென்னை, திருவள்ளூரில் நாளையும் விடுமுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செக் பண்ணுங்க
சென்னை: மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பெருமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாளைய தினம் சென்னை, திருவள்ளூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் சில தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடிவிட்டு சென்று விட்டது. பேயாத பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.

பேயாத பெருமழை பெய்த காரணத்தால் சென்னை புறநகர் பகுதிகளில் எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல குடியிருப்புகளை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது. இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் நாளைய தினமும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளைய தினம் வியாழக்கிழமையும் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் தாலுகாவில் வழக்கம் போல நாளை கல்வி நிறுவனங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேபோல் செங்கல்பட்டில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய ஆறு தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 7.12.23 வியாழக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல கல்லூரிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்தந்த கல்வி நிறுவனங்கள் சார்பில் வரும் 11ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகள் மிதக்கின்றன. பெருவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 4 வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications