சென்னையில் இன்னொரு "புயல்".. ஜெயலலிதாவை ஓவர்டேக் செய்த "இரும்பு பெண்மணி" மேயர் பிரியா.. சபாஷ் திமுக
சென்னை: தன் மீது வீசப்படும் விமர்சனங்களை, சாதனைகளாக மாற்றிக்காட்டுவதே, தலைமைக்குரிய மற்றொரு பண்பாகும்.. அப்படி ஒரு சாதனையைதான் சென்னை மேயர் பிரியா செய்திருக்கிறார்.. அதுவும் இந்த குறுகிய நாட்களுக்குள்..!!
சென்னை மேயர் பிரியாவை பொறுத்தவரை, தன் மீதான விமர்சனங்களை எல்லாம் அசால்ட்டாக கடந்து செல்கிறார்.. பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்த்து வருகிறார்..

சபாஷ் பிரியா: மழைவெள்ளத்தில் சென்னை சூழ்ந்தபோது, மிக பொறுப்புடன் அவர் காட்டிய அக்கறை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.. முக்கியமாக மழைநீர் வடிகால் பணிகளில் வேகம் எடுத்ததுடன், புரட்சிகரமான பட்ஜெட்டையும் சமர்ப்பித்து அசரடித்து, அனைத்து சலசலப்புகளையும் கடந்து வெற்றிகரமாக 2வது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
சென்னை மேயர் பதவிக்கென்றே, ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.. அரிய பெருமிதம் இருக்கிறது.. இன்றைய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் அலங்கரித்த அரியணை அது.
விமர்சனங்கள்: அப்படியாகப்பட்ட இடத்தில் சென்னையின் 3வது பெண் மேயர் என்ற பெருமையுடன் பதவியேற்றவர் பிரியா ராஜன்.. ஆனால், பதவியேற்ற நாளிலிருந்தே, ஏகப்பட்ட விமர்சனங்களும், சர்ச்சைகளும், பரபரப்புகளும் இவர்மீது இணையத்தில் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டன.
மேயர் பிரியாவை கேள்வி கேட்டால், சேகர்பாபு பதில் சொல்கிறாரே? "மேயருக்கு பேச தெரியாது. அவர் ஒரு குழந்தை" என்கிறாரே? வயது எதுவானாலும், மதிப்பிற்குரிய பதவியில் அமர்ந்தவரை, சேகர்பாபு இப்படி சொல்லலாமா? மேயர் பிரியாவுக்கு அமைச்சர் குடைபிடித்தது உண்மையா? அமைச்சர் நேரு ஒருமையில் பிரியாவை சொல்வது சரியா? காரின் ஃபுட்போர்டில் ஒரு மேயர் தொங்கி கொண்டு செல்லலாமா? மேயர் என்றும் பாராமல், பிரியாவின் கைகளில், திமுக ரங்கநாதன் "உரசியது" சரியா? போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்திய விவாதங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
சென்னைவாசிகள்: ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல், பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்த்து வருகிறார் மேயர் பிரியா.. மிக பொறுப்புடன் சென்னையின் நலனில் அவர் காட்டி வரும் அக்கறை, சென்னைவாசிகளிடம் ஆரம்பத்திலிருந்தே பரவலான வரவேற்பையும் பெற்று வருகிறது.
இதில் மிக முக்கியமானது, வடிகால் கால்வாய் அமைக்கும் பணியை தீவிரப்படுத்தியிருந்ததுதான்... கடந்த ஆட்சியில் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை என்ற பாராட்டு திமுக அரசுக்கு கிடைத்து வருகிறது.
சென்னையில் எப்போது மழை வந்தாலும், முக்கிய சாலைகளில், நள்ளிரவு நேரங்களில், ரெயிட் கோட்டுடன் பிரியாவை காண முடியும்.. விடிகாலை நேரமானாலும், அதிகாரிகளுக்கு முன்பே ஸ்பாடில் ஆஜராகிவிடுவார் பிரியா.. நேரடி ஆய்வுகளாகட்டும், மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கையை மாநகராட்சி ஆணையருடன் சேர்ந்து எடுத்ததாகட்டும், எல்லாமே ஜரூர் வேகத்தில் நடந்து முடிந்துவிடும்.
ரெயின்கோட்: கடந்த 2 நாட்களுக்குமுன்புகூட, நள்ளிரவு நேரத்தில், மழையில் ரெயின் கோட்டுடன், கையில் வாக்கி டாக்கியோடு, மேயர் பிரியா மேற்கொண்டிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அபாரமானவை..
எனவே, எத்தகைய விமர்சனங்கள் தன்மீது எழுந்தாலும், அத்தனையையும் அசால்ட்டாக கடந்து சென்று வருகிறார் பிரியா.. இதோ கடந்த 2 நாட்களாகவே, இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டு, மரங்களை சீர்செய்து, நிவாரண பணிகளை மேற்கொண்டுவரும் மாநகராட்சி ஊழியர்களை கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.. அப்படியிருந்தும்கூட நடிகர் விஷால் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
நடிகர் விஷால்: "மழை நீர் வடிகால் என ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிச்சு முடிசீங்களே. அது சென்னைக்கு தானா இல்லை சிங்கப்பூருக்கு செஞ்சீங்களா" என்று வீடியோ வெளியிட்டு கேட்டிருந்தார். "2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்" என்று பிரியா தந்திருந்தார்.
இந்நிலையில்தான், இரும்பு பெண் மேயர் பிரியா என்று இணையவாசிகள் அவரை பாராட்டி வருகிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என்பார்கள். ஆனால், கடந்த 2015 செம்பரம்பாக்கம் சம்பவம், அதிமுக ஆட்சி மீதான அவநம்பிக்கையை சம்பாதித்துவிட்டது.
ஜெயலலிதா: "உங்களுக்காக நான்... உங்களோடு நான்" என்று சொன்ன ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவேயில்லை.. அதற்கு பதிலாக, மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வாட்ஸ்-அப் மூலம், வருத்தம் சொல்லியிருந்தார். இதைத்தான் அன்று டாக்டர் ராமதாஸ் கேள்வியாக கேட்டிருந்தார்.
"உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள் தான்" என்றெல்லாம் தன்னை இயேசுநாதராகவே நினைத்துக்கொண்டு வசனங்களை வாரி இறைத்துள்ளார் ஜெயலலிதா. இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படியே வசனம் பேசியும், கிளீசரின் போடாமல் கண்ணீர் வடித்தும் மக்களை ஏமாற்றி விடலாம் என ஜெயலலிதா நினைத்துக் கொண்டிருக்கிறாரோ" என்று காட்டமாக கேட்டிருந்தார் டாக்டர் ஐயா.
சம்பவம்: இந்த சம்பவத்தைதான், தற்போது மேயர் பிரியாவுடன் ஒப்பிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.. முதல்வர் பதவியிலிருந்த ஜெயலலிதாவே, புயல் நேரத்தில் மக்களை சந்திக்காமல், பல நாட்கள் கழித்து வேனில் ஏறிச்சென்று, "வாக்காள பெருமக்களே" என்று வாக்கு கேட்டார். ஆனால், பிரியா அப்படியில்லை.
தனக்கு அளிக்கப்பட்ட மேயர் பதவியை செம்மைப்படுத்தி வருகிறார்.. மழையில் நனைந்தபடி பணி செய்து வருகிறார். இங்கு பிரியாவை மட்டும் குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது.. அமைச்சர் உதயநிதியையும் பாராட்டியே ஆக வேண்டியிருக்கிறது. மழை கோட் அணிந்துகொண்டு, முகமெல்லாம் ஒருவித கலக்கமும், பதற்றத்துடன், சேதமடைந்த வீடுகளுக்குள் நுழைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் உதயநிதி..
ஸ்டாலின்: ஆக, இங்கே மேயர், அமைச்சர் என்பதெல்லாம் கிடையாது விஷயம்.. மக்கள் நலன் மட்டுமே பிரதானமாக பார்ப்படுகிறது.. அப்படித்தான், செழுமைப்படுத்தி தன்னுடைய நிர்வாகத்தை நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.. அவரது வழிகாட்டுதலில், விமர்சனங்களை முறித்துபோட்டு, சென்னையை மழை பாதிப்பிலிருந்து மீட்டு வருகிறார் வணக்கத்துக்குரிய மேயர் பிரியா...!!!
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications