மக்களே ரெடியா.. தொடங்கியது மின்சார ரயில்.. சென்னை புறநகரில் நாளை ரயில்கள் இயங்கும்.. வந்தது மெசேஜ்
சென்னை: சென்னையில் மழைநீர் வடிந்து வரும்நிலையில், ரயில் சேவைகளும் மெல்ல மெல்ல துவங்கி வருகின்றன. இதுகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னையில் புயல் காரணமாக மொத்த சேவைகளுமே முடங்கிவிட்டன.. சென்னை நகரமே வெள்ளத்தில் மிதந்தது.. இதில், ரயில்வே தண்டவாளங்கள் முழுவதுமே வெள்ளம் நீர் சூழ்ந்து காணப்பட்டது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பல்வேறு பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சென்னையில் புறநகர் ரயில் சேவையானது, நேற்று முன்தினம் 3ம் தேதியில் இருந்தே ரத்து செய்யப்பட்டது.

வெள்ளம்: தற்போது, வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு சென்னை மெல்ல திரும்பி வருகிறது. தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவது உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறன்றன.. முக்கியமாக, தாம்பரம், பேசின் பிரிட்ஜ், கோபால்சாமி நகர் பகுதிகளில் தண்டவாளத்தில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட நேர இடைவெளியில் சென்னையில் மின்சார ரயில்கள் சேவையும் ஆரம்பமாகி உள்ளன.. சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு வழியாக செல்லும் மின்சார ரயில்கள் நாளை முதல் இயக்கபடுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
துரித பணிகள்: அந்தவகையில், சென்னை புறநகர் ரயில்கள் இன்று மதியம் 2 மணிக்கு இயங்கத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.. இன்று இயக்கப்பட்ட அட்டவணைப்படி நாளையும் புறநகர் ரயில்கள் இயங்கும் என்று அறிவித்துள்ளது.
அதேபோல, சென்னை கடற்கரை- திருவள்ளூர்-அரக்கோணம் மார்க்கத்திலும் புறநகர் ரயில்களின் சேவை தொடங்கியிருக்கிறது. திருவொற்றியூர்-கும்மிடிப்பூண்டி இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1.சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் 30 நிமிட இடைவெளியில் இயக்கம்
2.சென்னை கடற்கரை - திருவள்ளூர் - அரக்கோணம் (பெரம்பூர் வழி) 30 நிமிட இடைவெளியில் இயக்கம்
3.திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி இடையே 1 மணிநேர இடைவெளியில் இயக்கம்
4.வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே 30 நிமிட இடைவெளியில் புறநகர் ரயில்கள் இயக்கம்
புதன்கிழமை (டிசம்பர்-6) அன்றும் மறுஅறிவிப்பு வரும்வரை இதே அட்டவணையில் புறநகர் ரயில் இயக்கப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications