சென்னை வெள்ளம்.. நிவாரண பொருட்களை பிரித்து வழங்க ஐஏஎஸ் அதிகாரிகள் குழு.. வாட்ஸ் அப் எண்ணும் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை பிரித்து வழங்குவதற்கு ஐஏஎஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொண்டு நிறுவனங்கள் நிவாரண பொருட்களை அனுப்புவது தொடர்பாக வாட்ஸ் அப் எண்ணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் கடந்த 26 ஆம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழை விட்டு 3 நாட்கள் ஆகியும் இன்னும் ஒருசில இடங்களில் மழை வெள்ளம் வடியவில்லை.

Chennai floods, Tamil Nadu government constituted an IAS Officers team to distribute the relief items

வெள்ள நீரை வடிய வைக்க அரசு பல்வேறு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதேபோல் நிவாரண பணிகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன. பல்வேறு அமைப்புகளும் மக்களுக்கு உதவி வருகின்றன.

இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை பிரித்து வழங்குவதற்கு ஐஏஎஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொண்டு நிறுவனங்கள் நிவாரண பொருட்களை அனுப்புவது தொடர்பாக வாட்ஸ் அப் எண்ணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த குழுவினர் தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் நிவாரண பொருட்களை நிவாரண உதவிகள் தேவைப்படும் இடங்களுக்கு பிரித்து அனுப்புவர். இது தொடர்பாக தொண்டு நிறுவனங்கள் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக 73977 66651 வாட்ஸ் அப் கொடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+