சென்னையில் 100 டிகிரி வெயில்.. இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்த மழை மக்களை குளிர வைத்திருக்கிறது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் வெயில் மிக தீவிரமாக இருக்காது என்றாலும், ஓரளவுக்கு காட்டமாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வெயில் முந்தைய நாட்களை போல இல்லை என்றாலும், அடுத்தடுத்த நாட்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெயில் எட்டும். எனவே மக்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

சென்னையின் வானிலை
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில்,
ஏப்ரல் 18 குறைந்தபட்சம் 25°C அதிகபட்சம் 39°C பலமான காற்று வீசும்
ஏப்ரல் 19 குறைந்தபட்சம் 26°C அதிகபட்சம் 38°C காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை
ஏப்ரல் 20 குறைந்தபட்சம் 25°C அதிகபட்சம் 37°C ஓரளவு மேகமூட்டம்
ஏப்ரல் 21 குறைந்தபட்சம் 25°C அதிகபட்சம் 37-38°C வானம் தெளிவாக இருக்கும்
ஏப்ரல் 22 குறைந்தபட்சம் 25°C அதிகபட்சம் 37-38°C வானம் தெளிவாக இருக்கும்
ஏப்ரல் 23 குறைந்தபட்சம் 25°C அதிகபட்சம் 37-38°C வானம் தெளிவாக இருக்கும்
வெயில் எப்படி இருக்கும்?
என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும், 20ம் தேதி தொடங்கி 23 வரை வானிலை சீரானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் வெயில் 41 டிகிரி அதாவது 105 டிகிரி ஃபாரன்ஹீட்வரை பதிவாகியிருந்தது. ஆனால் அடுத்த ஒருவாரத்திற்கு இப்படியான கடும் வெயில் இருக்காது என்று தெரிவித்துள்ள வானிலை மையம், இன்றும் நாளையும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மழை இருக்குமா?
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-04-2025 முதல் 23-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த வரை, இன்று முதல் 19ம் தேதி வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். 20 மற்றும் 21ம் தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவு:
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சென்னை மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏப்ரலில் மழை பெய்வது அதிசயம் என்றாலும், அந்த மழை தொடர்ந்து நீடிக்காது. எனவே வெயில் உச்சத்தை எட்டும்போது அதற்கேற்ப மக்கள் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications