சென்னையே தடுமாறுது.. இரவெல்லாம் வெளுத்தெடுத்த மழை.. நம்பருடன் ஓடி வந்தது யார் பாருங்க.. இனி நிம்மதி
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும்நிலையில், பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாநகராட்சி இலவச உதவி எண்களை வெளியிட்டிருக்கிறது. நேற்றிரவு இலவச எண்களை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பருவமழை பலமாக பெய்து வரும்நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை அடுத்தடுத்து பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவித்துள்ளது.

அந்தவகையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது. நேற்று மாலையில் மீண்டும் துவங்கிய மழை, இரவெல்லாம் வெளுத்து வாங்கியது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது..
கனமழை: கனமழையால் சென்னை முழுக்க 145 இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், அதில் 68 இடங்களில் முழுமையாக மழைநீர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், எஞ்சிய 77 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
அந்தவகையில், மழை தொடர்ந்து பெய்து வந்தால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் அபாயம் இருக்கும் நிலையில், அவற்றை மோட்டார் மூலம் வெளியேற்றவும் தயார் நிலையில் 296 மோட்டார்கள் உள்ளதாகவும், 40 மோட்டார்கள் இப்போது தேங்கியுள்ள நீரை வெளியேற்றப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
புகார்கள்: மழை நீடிப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன், சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், 1913 என்ற இலவச உதவி எண்ணை நேற்றிரவு அறிவித்திருந்தது சென்னை மாநகராட்சி.
அதேபோல. 044 25619204, 044 25619206, 044 25619207, ஆகிய எண்களிலும், 94454 77205 என்ற வாட்ஸ்அப் நம்பரிலும் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டிருந்தது.
இப்போது மேலும் கூடுதலான இலவச உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், +91 94454 7720 என்ற வாட்ஸ் அப் நம்பரை வெளியிட்டிருக்கிறது.. இந்த எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என்றும், பொதுமக்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இருக்கிறோம் என்றும் மாநகராட்சி நிர்வாகம், சென்னைவாசிகளுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அறிவுறுத்தல் : ஏற்கனவே, சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாகை பயன்படுத்துமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியிருக்கிறது.

இதேபோல், சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்றும், புகார்களை தெரிவிக்க 044-45674567 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.
இன்று காலை தீவிரம்: இதனிடையே, இன்று காலை பெரும்பாலும் எந்தவொரு சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது..
முக்கியமாக, மழைநீர் காரணமாகச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரம் டூவீலர் வாகன சுரங்கப்பாதை மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும், அதைத் தவிர நகரில் அனைத்து சுரங்கப்பாதைகளும் வழக்கம் போலவே இயங்குவதாகவும், கெங்குரெட்டி, மேட்லி உள்ளிட்ட 4 சுரங்கப்பாதைகளில் மழை நீர் சற்று தேங்கியுள்ள போதிலும் வாகன போக்குவரத்திற்கு அந்த பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications