"200 ஆண்டில் இல்லாத ரெக்கார்டு.." சென்னையில் கொட்டுதே கனமழை.. வீக் எண்டில் எப்படி இருக்கும்?
சென்னை: தலைநகர் சென்னையில் நேற்றைய தினம் நல்ல மழை பெய்த நிலையில், வீக் எண்டில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. பருவமழை தொடக்கத்தில் பெரியளவில் மழை இல்லை என்ற போதிலும், இப்போது சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாகச் சென்னையில் நேற்றைய தினம் பல இடங்களில் கனமழை கொட்டியது. சென்னையில் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
சென்னை: இதற்கிடையே சென்னையில் இந்தாண்டு பருவமழை மிகவும் சிறப்பாக இருப்பதாகச் சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் மழை இருக்கும் என்றே சென்னை ரெயின்ஸ் கூறியுள்ளனர். மேலும், இந்த கடந்த 200 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த சீசனில் அதிக மழை என்ற ரெக்காட்டை படைக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சென்னை ரெயின்ஸ் தனது ட்விட்டரில், "இந்த பருவமழை சீசனில் மீனம்பாக்கத்தில் சுமார் 800 மிமீ மழை கொட்டியுள்ளது. இந்தாண்டு பருவமழை சென்னையில் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த வீக் எண்டில் மீண்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே ஏற்படும் நிகழ்வாகும்" என்று பதிவிட்டுள்ளனர்.
இசை நிகழ்ச்சி: கடந்த முறை ஏ.ஆர்.ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" என்ற இசைக் கச்சேரி சென்னையில் நடைபெற இருந்தது. இருப்பினும், அப்போது திடீரென கொட்டிய கனமழையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த வாரம் "மறக்குமா நெஞ்சம்" இசைக் கச்சேரி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை ரயின்ஸ் தெரிவித்துள்ளது. மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்த முறையும் இசைக் கச்சேரிக்குச் சிக்கல் ஏற்படலாம்.
மேலும், சென்னை ரயின்ஸ் வானிலை குறித்து தனது இணையத்திலும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். அதில் ஜூன் முதல் செப். வரையிலான தென்மேற்கு பருவமழையின் போது சென்னை ஆந்திரப் பிரதேசம் மற்றும் சென்னை நுங்கம்பாக்கம் ஏரியாவில் கடந்த 1991 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் சராசரியாக 474 மற்றும் 440 மிமீ மழைப் பதிவாகும்.
மழை: இது வருடாந்த மழையின் 1/3 பங்கு ஆகும். செப்டம்பரில் இன்னும் மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில், சென்னை ஆந்திரா மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் 774 மற்றும் 597 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இது வழக்கமாகப் பெய்யும் தென்மேற்குப் பருவமழையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
200 ஆண்டுகளில் முதல்முறை: டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஆந்திர/ தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இந்த வீக் எண்டில் மீண்டும் இந்த பகுதிகள் ஹாட்ஸ்பாட்டாக மாறலாம். இந்த ஆண்டு இதுவரை சென்னை ஆந்திரா பகுதியில் 774 மிமீ பதிவாகியுள்ள நிலையில், இது 800 மிமீயை தாண்டலாம். 2000ஐ ஆண்டுக்குப் பிறகு 800 மிமீ மழை பெய்வது இதுவே முதல்முறையாகும்.. கடந்த 200 ஆண்டுகளில் 1870 மற்றும் 1996 என இரண்டு முறை மட்டுமே இது நடந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications