சென்னையில் இன்றும், நாளையும் மழை வெளுக்கும்.. கோவை, நீலகிரிக்கு நாளை கனமழை அலர்ட்.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் நேற்று வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது. வெயில் வழக்கத்துக்கு மாறாக அதிகம் கொளுத்தி எடுத்தது. நேற்று மட்டும் 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது. குறிப்பாக நெல்லை பாளையங்கோட்டையில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. க.பரமத்தி, ஈரோடு, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

"வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுவை காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலையும் இயல்பை விட அதிகமாக இருக்கும். 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக கூடும். இதேபோன்று தலைநகர் சென்னையை எடுத்துக்கொண்டால் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும் நாளையும் சென்னையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications