சென்னை அருகே மிக்ஜாம் புயல் டேரா! மக்களுக்காக திறக்கப்பட்ட லயோலா கல்லூரி கதவுகள்! தயாராகும் உணவு
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைய லயோலா கல்லூரியில் தங்குவதற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. காலையில் சென்னை கடல் பகுதியை நெருங்கும் போது சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலை முதலே சூறைக் காற்று வீசி வருகிறது.

இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகள் உடைந்து மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.
இதனால் அந்த பகுதிகள் எல்லாம் தனித்தீவுகள் போல் காட்சி அளிக்கின்றன. தாம்பரத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அது போல் படகுகள் அனுப்பப்பட்டு அதன் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த புயலால் இன்று நள்ளிரவு வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது ஆந்திராவின் பாபட்லா அருகே நாளை பகல் கரையை கடக்கிறது. இந்த புயல் மெதுவாக நகர்ந்து செல்வதால் அதிக மழையை கொடுக்கிறது. வேகமாக நகர்ந்துவிட்டால் அந்த அளவுக்கு மழை இருக்காது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் குடியிருப்புகளுக்கு வெள்ளம் வந்து விட்டதால் அவர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருகிறார்கள். உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதற்கு கூட வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் எங்கு மேடு பள்ளம் இருக்குமோ என அச்சத்தில் இருக்கிறார்கள். ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டதால் பேச்சிலர்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் இடமில்லாமல் இருப்பவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் தங்கிக் கொள்ள அக்கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சூளைமேடு, கோடம்பாக்கம், நமச்சியவாயபுரம், தியாகராயர் நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் கைக்குழந்தைகளுடன் தஞ்சமடைந்துள்ளனர்.
அந்த கல்லூரியில் ஒரு கட்டடத்தை ஒதுக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு வழங்கவும் லயோலா கல்லூரி ஏற்பாடு செய்து வருகிறது. கல்லூரிக்கு அருகில் இருப்பவர்கள், அவசியத் தேவை இருப்பவர்கள் மட்டும் கல்லூரியில் தங்க வருமாறு கிளாட்சன் சேவியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications