பிச்சு உதறப்போகும் கனமழை.. 12 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்! 6ஆம் தேதி வரை பக்கா ஆக்ஷன் இருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,
"1. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

02.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
05.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ராமநதி அணைப் பகுதி (தென்காசி) 9, காரைக்கால் (காரைக்கால்), ராமநாதபுரம் தலா 8, மாஞ்சோலை (திருநெல்வேலி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), ராமநாதபுரம் KVK AWS தலா 7, வத்திராயிருப்பு (விருதுநகர்), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), செங்கோட்டை (தென்காசி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), பெரியாறு அணை (விருதுநகர்), கோயம்புத்தூர்-தெற்கு தலா 6, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), கடல்குடி (தூத்துக்குடி), இரணியல் (கன்னியாகுமரி), TNAU கோயம்புத்தூர், காக்காச்சி (திருநெல்வேலி), திருப்பூர் PWD (திருப்பூர்), திருவாரூர், ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), பயணியர் விடுதி சிவகங்கை, சாத்தூர் (விருதுநகர்), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), ஆயிக்குடி (தென்காசி), மானாமதுரை (சிவகங்கை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) தலா 5, தக்கலை (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி), கழுகுமலை (தூத்துக்குடி), சிவகங்கை, பாளையம்கோட்டை (திருநெல்வேலி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), மூலனூர் (திருப்பூர்), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 4, களக்காடு (திருநெல்வேலி), கிளானிலை (புதுக்கோட்டை), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), நாகப்பட்டினம், கோவில்பட்டி (தூத்துக்குடி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கயத்தார் (தூத்துக்குடி), நன்னிலம் (திருவாரூர்), செருமுள்ளி (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), கருப்பாநதி அணை (தென்காசி), கவுந்தப்பாடி (ஈரோடு), கல்லிக்குடி (மதுரை), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), அணைகெடங்கு (கன்னியாகுமரி), கின்னக்கோரை (நீலகிரி), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), குண்டாறு அணை (தென்காசி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), ராஜபாளையம் (விருதுநகர்), வனமாதேவி (கடலூர்), சிவகிரி (தென்காசி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), பாண்டவரடி (திருவாரூர்), திருநெல்வேலி, கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), சிதம்பரம் AWS (கடலூர்), SRC குடிதாங்கி (கடலூர்), பேரையூர் (மதுரை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம், அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 3, ஈரோடு, முக்கடல் அணை (கன்னியாகுமரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), சிதம்பரம் (கடலூர்), குன்னூர் (நீலகிரி), தென்காசி, நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), குழித்துறை (கன்னியாகுமரி), கே.எம்.கோயில் (கடலூர்), சென்னிமலை (ஈரோடு), திருச்சுழி (விருதுநகர்), கோடியக்கரை (மயிலாடுதுறை), நாங்குனேரி (திருநெல்வேலி), காரைக்குடி (சிவகங்கை), கடம்பூர் (தூத்துக்குடி), ஊத்துக்குளி (திருப்பூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), கொடுமுடி (ஈரோடு), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பரமக்குடி (ராமநாதபுரம்), ராதாபுரம் (திருநெல்வேலி), சிவகாசி (விருதுநகர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), காரியாப்பட்டி (விருதுநகர்), குளச்சல் (கன்னியாகுமரி), சண்முகாநதி (தேனி), மண்டபம் (ராமநாதபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), கோவிலங்குளம் (விருதுநகர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), நம்பியாறு அணை (திருநெல்வேலி), லால்பேட்டை (கடலூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), உத்தமபாளையம் (தேனி), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை) களியல் (கன்னியாகுமரி), பர்லியார் (நீலகிரி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), தாராபுரம் (திருப்பூர்), பழனி (திண்டுக்கல்), கமுதி (ராமநாதபுரம்) தலா 2, கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வானூர் (விழுப்புரம்), புவனகிரி (கடலூர்), சோழவரம் (திருவள்ளூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), காட்டுமயிலூர் (கடலூர்), கூடலூர் (தேனி), திருவையாறு (தஞ்சாவூர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), வடகுத்து (கடலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), எட்டயபுரம் (தூத்துக்குடி), திருப்புவனம் (சிவகங்கை), புலிப்பட்டி (மதுரை), கடலூர், அவினாசி (திருப்பூர்), கெத்தை (நீலகிரி), போதானூர் இரயில் நிலையம் (கோயம்புத்தூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), பூதலூர் (தஞ்சாவூர்), போடிநாயக்கனூர் (தேனி), க.பரமத்தி, கடலூர் ஆட்சியர் அலுவலகம், மங்களபுரம் (நாமக்கல்), பாப்பாரப்பட்டி KVK AWS (தர்மபுரி), மண்டலம்4 பெருங்குடி (சென்னை), காங்கேயம் (திருப்பூர்), கொத்தவாச்சேரி (கடலூர்), மரக்காணம் (விழுப்புரம்), சிவலோகம் (சிற்றாறு-II) (கன்னியாகுமரி), திருவாடானை (ராமநாதபுரம்), அரிமளம் (புதுக்கோட்டை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வலங்கைமான் (திருவாரூர்), உசிலம்பட்டி (மதுரை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), சூலூர் (கோயம்புத்தூர்), மடத்துக்குளம் (திருப்பூர்), அமராவதி அணை (திருப்பூர்), பெருங்குடி (சென்னை), அரியலூர் PTO (அரியலூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), தேக்கடி (தேனி), சங்கரன்கோயில் (தென்காசி), கோடநாடு (நீலகிரி), பாம்பன் (ராமநாதபுரம்), தொண்டி (ராமநாதபுரம்), ஆயின்குடி (புதுக்கோட்டை), சோழிங்கநல்லூர் (சென்னை), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி), மன்னார்குடி (திருவாரூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), திண்டிவனம் (விழுப்புரம்), மயிலாடுதுறை, திருமானூர் (அரியலூர்), புதுச்சேரி, கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications