சீரியஸ் ஆகிடுச்சு.. இன்றும் மழை கொட்டித் தீர்க்கப்போகுது! அடுத்த 5 நாளும் சரவெடிதான் - வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, "இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.09.2023 மற்றும் 21.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.09.2023 முதல் 24.09.2023: வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 13, கள்ளக்குறிச்சி, ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) தலா 12, புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி) 11, தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை) 9, அரூர் (தர்மபுரி), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) தலா 8, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), TCS மில் கேதண்டபட்டி (திருப்பத்தூர்) தலா 7, BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), திருப்புவனம் (சிவகங்கை), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்) தலா 6, KCS மில்-1 மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), திருச்செங்கோடு (நாமக்கல்), கீரனூர் (புதுக்கோட்டை), விராலிமலை (புதுக்கோட்டை), கரியகோவில் அணை (சேலம்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), திருவையாறு (தஞ்சாவூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), குன்னூர் (நீலகிரி), செங்கம் (திருவண்ணாமலை), திருவண்ணாமலை, BASL மணம்பூண்டி (விழுப்புரம்) தலா 5, வரட்டுப்பள்ளம் (ஈரோடு), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), குளித்தலை (கரூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), ஏற்காடு (சேலம்), கல்லணை (தஞ்சாவூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), நந்தியார் (திருச்சிராப்பள்ளி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), திருப்பத்தூர் PTO, ஆம்பூர் (திருப்பத்தூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), RSCL-2 கெடார் (விழுப்புரம்), ஏற்காடு (சேலம்) தலா 4, அரியலூர், கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), காட்டுமயிலூர் (கடலூர்), தர்மபுரி, பவானி (ஈரோடு), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), KCS மில்-2 மூர்பாளையம் (கள்ளக்குறிச்சி), காஞ்சிபுரம், உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), பாரூர் (கிருஷ்ணகிரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), ஆத்தூர் (சேலம்), டேனிஷ்பேட்டை (சேலம்), சங்கரி துர்க்கம் (சேலம்), தலைவாசல் (சேலம்), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), வீரகனூர் (சேலம்), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), முசிறி (திருச்சிராப்பள்ளி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), போளூர் (திருவண்ணாமலை), மேலாலத்தூர் (வேலூர்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்) தலா 3, செங்கல்பட்டு, செய்யூர் (செங்கல்பட்டு), மதுராந்தகம் (செங்கல்பட்டு), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கடலூர், குப்பநத்தம் (கடலூர்), லக்கூர் (கடலூர்), வனமாதேவி (கடலூர்), வேப்பூர் (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), பென்னாகரம் (தர்மபுரி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), பவானிசாகர் (ஈரோடு), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), KCS மில்-2 கச்சிராயோபாலயம் (கள்ளக்குறிச்சி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), சுரலாகோடு (கன்னியாகுமரி), மாயனூர் (கரூர்), பஞ்சப்பட்டி (கரூர்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), கோடியக்கரை (மயிலாடுதுறை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மங்களபுரம் (நாமக்கல்), நாமக்கல், சேந்தமங்கலம் (நாமக்கல்), செட்டிகுளம் (பெரம்பலூர்), அதனக்கோட்டை (புதுக்கோட்டை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), திருமயம் (புதுக்கோட்டை), உடையாளிபட்டி (புதுக்கோட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), கங்கவல்லி (சேலம்), சிவகங்கை (சிவகங்கை), தஞ்சாவூர் PTO, அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), வல்லம் (தஞ்சாவூர்), பர்லியார் (நீலகிரி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி AP, தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி டவுன், முத்துப்பேட்டை (திருவாரூர்), அவினாசி (திருப்பூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), குடியாத்தம் (வேலூர்), BASL முகையூர் (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), RSCL வல்லம் (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்), தர்மபுரி தலா 2, ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), சின்கோனா (கோயம்புத்தூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), சிறுவாணி ஆதிவாரம் (கோயம்புத்தூர்), வால்பாறை (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), லால்பேட்டை (கடலூர்), மீ மாத்தூர் (கடலூர்), பெலாந்துறை (கடலூர்), SRC குடிதாங்கி (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), வடகுத்து (கடலூர்), மாரண்டஹள்ளி (தர்மபுரி), பாலக்கோடு (தர்மபுரி), பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை (தர்மபுரி), சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை (தர்மபுரி), திண்டுக்கல் (திண்டுக்கல்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கொடைக்கானல் (திண்டுக்கல்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கோடிவேரி (ஈரோடு), பெருந்துறை (ஈரோடு), சத்தியமங்கலம் (ஈரோடு), DSCL கீழ்படி (கள்ளக்குறிச்சி), SCS மில் பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), பாலமோர் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புதன் அணை (கன்னியாகுமரி), தோகமலை (கரூர்), சூலகிரி (கிருஷ்ணகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), சிட்டம்பட்டி (மதுரை), இடையப்பட்டி (மதுரை), பெரியபட்டி (மதுரை), தானியமங்கலம் (மதுரை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), மணல்மேடு (மயிலாடுதுறை), சீர்காழி (மயிலாடுதுறை), எருமப்பட்டி (நாமக்கல்), குமாரபாளையம் (நாமக்கல்), ராசிபுரம் (நாமக்கல்), தழுதலை (பெரம்பலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), காரையூர் (புதுக்கோட்டை), பெருங்களூர் (புதுக்கோட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), ஓமலூர் (சேலம்), சேலம், தம்மம்பட்டி (சேலம்), திருப்பத்தூர் (சிவகங்கை), புடலூர் (தஞ்சாவூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), லால்குடி (திருச்சிராப்பள்ளி), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), தாத்தையங்கர்பேட்டை (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), மன்னார்குடி (திருவாரூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), நன்னிலம் (திருவாரூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), காட்பாடி (வேலூர்), பொன்னை அணை (வேலூர்), வேலூர் (வேலூர்), செஞ்சி (விழுப்புரம்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), விழுப்புரம், கொடைக்கானல் (திண்டுக்கல்), நாமக்கல், புதுச்சேரி, காரைக்கால் தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்று மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20.09.2023: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications